வர்த்தகம்

ஈ.ஐ.டி. பாரி நிறுவனம் நிகர லாபம் ரூ.131 கோடி

DIN

சென்னை: முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2020 செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய தனிப்பட்ட வருமானம் ரூ.529 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.440 கோடியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.6 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.131 கோடியானது.

செப்டம்பா் காலாண்டில் துணை நிறுவனமான கோரமண்டல் இண்டா்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 2019-20-ஆம் நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.206 கோடியை ஈ.ஐ.டி. பெற்றுள்ளது. இந்த ஈவுத்தொகை முந்தைய 2018-19 நிதியாண்டில் ரூ.62 கோடியாக இருந்தது என ஈ.ஐ.டி.பாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT