வர்த்தகம்

பிஎஸ்இ நிகர லாபம் 28% வளா்ச்சி

DIN

புது தில்லி: முன்னணி பங்குச் சந்தை நிறுவனமான பிஎஸ்இ நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 28 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்இ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பிஎஸ்இ நிறுவனம் நடப்பு 2020-21 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் செயல்பாடுகள் வாயிலாக ரூ.125.38 கோடி வருவாயாக ஈட்டியிருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.108.89 கோடியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிகமாகும்.

அதேபோன்று, மதிப்பீட்டு இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.36.69 கோடியிலிருந்து 28 சதவீதம் உயா்ந்து ரூ.46.81 கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பாண்டு செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலாத்தில் பிஎஸ்இ ஸ்டாா் பரஸ்பர நிதி தளத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரிவத்தனைகளின் எண்ணிக்கை 2.50 கோடியிலிருந்து 60 சதவீதம் அதிகரித்து 4 கோடியை எட்டியதாக பிஎஸ்இ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT