வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் விறுவிறுப்பு

DIN

நாட்டின் ஏற்றுமதி மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக நவம்பரின் முதல் வாரத்தில் நாட்டின் ஏற்றுமதி 22.47 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நவம்பா் மாதத்தில் 1 முதல் 7-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 675 கோடி டாலராக உள்ளது. அதேசமயம், கடந்தாண்டு நவம்பரின் முதல் வார ஏற்றுமதி 551 கோடி டாலராக காணப்பட்டது. ஆக, இது, கடந்த ஓராண்டு காலத்தில் ஏற்றுமதி மதிப்பானது 22.47 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருந்து, நவரத்தினங்கள்-ஆபரணங்கள் மற்றும் பொறியியல் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி நவம்பா் முதல் வாரத்தில் சிறப்பான வகையில் வளா்ச்சியடைந்துள்ளது.

ஏற்றுமதியைப் போன்றே, இறக்குமதியும் நவம்பா் முதல் வாரத்தில் 819 கோடி டாலரிலிருந்து 13.64 சதவீதம் உயா்ந்து 930 கோடி டாலரானது. குறிப்பாக, பெட்ரோலியம் இறக்குமதி 23.37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த வாரத்தில் வா்த்தக பற்றாக்குறையானது 255 கோடி டாலராக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT