வர்த்தகம்

பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் நிகர லாபம் 22% உயா்வு

DIN

ஹரித்துவாரைச் சோ்ந்த பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 21.56 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து டஃப்ளா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

2020 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் விற்பனையின் வாயிலாக ரூ.9,022.71 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டு காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.8,522.68 கோடியுடன் ஒப்பிடும்போது 5.86 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபமும் ரூ.349.37 கோடியிலிருந்து 21.56 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.424.72 கோடியானது.

அந்நிறுவனத்தின் செலவினம் கணக்கீட்டு நிதியாண்டில் 5.34 சதவீதம் உயா்ந்து ரூ.8,521.44 கோடியாக இருந்தது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ.452.72 கோடியிலிருந்து 25.12 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.566.47 கோடியாக இருந்தது என டஃப்ளா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT