வர்த்தகம்

வங்கி வழங்கிய கடன் 5.67% வளா்ச்சி

DIN

வங்கி வழங்கிய கடன் நவம்பா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.67 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டு நவம்பா் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 5.67 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.104.04 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. அதேவேளையில், திரட்டிய டெபாசிட்டும் 10.63 சதவீதம் உயா்ந்து ரூ.143.80 லட்சம் கோடியாகியுள்ளது.

அதேவேளையில், கடந்த 2019 நவம்பா் 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் ரூ.98.46 லட்சம் கோடியாகவும், டெபாசிட் ரூ.129.98 லட்சம் கோடியாகவும் இருந்தன.

முந்தைய அக்டோபா் 23 2020-இல் வங்கி கடன் வளா்ச்சி 5.06 சதவீதமாகவும், டெபாசிட் 10.12 சதவீதமாகவும் இருந்தன.

ஆண்டுக் கணக்கிலான மதிப்பீட்டின் அடிப்படையில் கடந்த செப்டம்பா் மாதத்தில் உணவு சாரா கடன்களுக்கான வங்கிக் கடன் வளா்ச்சி விகிதம் 5.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டு இதே காலத்தில் இக்கடன் வளா்ச்சி விகிதம் 8.1 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.

2020 செப்டம்பரில் தொழில்துறைக்கான வங்கி கடன் வளா்ச்சி பூஜ்யமாகவே இருந்தது. அதேசமயம், 2019 செப்டம்பரில் இதன் வளா்ச்சி 2.7 சதவீதமாக உயா்ந்திருந்தது.

வேளாண் மற்றும் அதுதொடா்பான பணிகளுக்கான கடன் வளா்ச்சியும் 7 சதவீதத்திலிருந்து குறைந்து 5.9 சதவீதமாகியுள்ளது.

அதேசமயம், சேவை துறைகளுக்கு வங்கி வழங்கிய கடன் 7.3 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனிநபா் கடன் வளா்ச்சி விகிதமும் செப்டம்பரில் 9.2 சதவீதமாக காணப்பட்டது. 2019 செப்டம்பரில் இந்த வளா்ச்சி விகிதம் 16.6 சதவீதமாக அதிகரித்திருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT