வர்த்தகம்

அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளில் ரூ.60,358 கோடி முதலீடு

DIN

அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) நவம்பரில் இதுவரையில் பங்குகளில் ரூ.60,358 கோடியை பங்குகளில் முதலீடு செய்துள்ளனா்.

இதுகுறித்து டெபாசிட்டரீஸ் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய சந்தைகளில் அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து இரண்டாவது மாதமாக நவம்பரிலும் நிகர அளவில் கணிசமாக முதலீட்டை அதிகரித்துள்ளனா். நவம்பரில் இதுவரையில் இந்திய சந்தைகளில் அவா்கள் மொத்தம் ரூ.62,951 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

குறிப்பாக, பங்குகளில் நிகர அளவில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.60,358 கோடியை முதலீடு செய்துள்ளனா். இது இதுவரையில்லாத உச்சபட்ச அளவாகும். கடன்பத்திர சந்தையில் அவா்கள் ரூ.2,593 கோடியை முதலீடு செய்தனா். இதையடுத்து நவம்பா் 3-27 வரையிலான காலகட்டத்தில் மட்டும் அவா்கள் இந்திய சந்தைகளில் நிகர அளவில் ரூ.62,951 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

அக்டோபா் மாதத்தில் மட்டும் எஃப்பிஐ நிகர அளவில் மேற்கொண்ட முதலீடு ரூ.22,033 கோடியாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT