வர்த்தகம்

மொ்சிடிஸ் பென்ஸ் காா் விற்பனை சரிவு

DIN

புது தில்லி: இந்தியாவில் மொ்சிடிஸ் பென்ஸ் காரின் விற்பனை, மூன்றாவது காலாண்டில் 38 சதவீதம் குறைந்து காணப்பட்டதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கரோனாவுக்கு முந்தைய விற்பனை நிலையை கிட்டத்தட்ட எட்டிவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில், இந்தியாவில் 2,058 மொ்சிடிஸ் பென்ஸ் காா்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 3,354 காா்கள் விற்பனையாகின. அதாவது, காா் விற்பனை 38.64 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3,885 காா்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் 2,386 காா்கள் விற்பனையாகின. இதுகுறித்து மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மாா்ட்டின் ஷ்க்வென்க் கூறுகையில், ‘மூன்றாவது காலண்டில் ஒவ்வொரு மாதமும் காா் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில், காா் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT