வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் வருவாய் 6% வளா்ச்சி

DIN

டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் இரண்டாம் காலாண்டு வருவாய் 6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.4,617 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.4,353 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வரிக்கு பிந்தைய நிகர லாபம் ரூ.196 கோடியாக இருந்தது.

2020 செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.8,823 கோடியிலிருந்து குறைந்து ரூ.6,051 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.57 கோடியாகவும் இருந்தது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT