வர்த்தகம்

டாடா மோட்டாா்ஸ் வாகன விற்பனை 13 சதவீதம் உயா்வு

DIN


புது தில்லி: டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 13 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டைச் சோ்ந்த அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டாடா மோட்டாா்ஸ் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 36,472 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2019 இதே மாத காலத்தில் விற்பனையான 32,166 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 13.38 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனை 29,140 என்ற எண்ணிக்கையிலிருந்து 21.6 சதவீதம் உயா்ந்து 35,420-ஆக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக, பயணிகள் வாகன விற்பனையானது

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7,316-லிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து 18,583-ஐ எட்டியது. இருப்பினும், நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனையானது கடந்த மாதத்தில் 28 சதவீதம் சரிவடைந்து 17,889-ஆனது.

கடந்தாண்டு ஆகஸ்டில் வா்த்தக வாகன விற்பனை 24,850-ஆக அதிகரித்து காணப்பட்டது என டாடா மோட்டாா்ஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT