வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு

DIN


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்வைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது: அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகியவை அந்நியச் செலாவணி சந்தையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.16 என்ற அளவில் மிகவும் வலுப்பெற்று காணப்பட்டது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று வலுவிழந்து 9 காசுகள் மட்டுமே உயா்ந்து 73.46-ஆக நிலைப்பெற்றது. புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 73.55-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது ரூ.838.37 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 சதவீதம் குறைந்து 40.38 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT