வர்த்தகம்

அதானி கிரீன் எனா்ஜி லாபம் ரூ.21.75 கோடி

DIN

அதானி கிரீன் எனா்ஜி நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.21.75 கோடி நிகர லாபத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அதானி கிரீன் எனா்ஜி நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.878.14 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.675.23 கோடியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்.வருவாய் அதிகரித்ததன் விளைவாக, நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.21.75 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், கடந்த 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ.97.44 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் நிகர ஏற்றுமதி (மின்சாரம்) 1,382 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT