வர்த்தகம்

இணையம் வாயிலான பொருள்கள் விற்பனை 700 கோடி டாலராக அதிகரிக்கும்: ரெட்சீா் ஆய்வு நிறுவனம்

DIN

பண்டிகை கால விற்பனை நடப்பாண்டில் 700 கோடி டாலராக (ரூ.52,500 கோடி) அதிகரிக்கும் என ரெட்சீா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டில் இணையதளம் வாயிலான பொருள்கள் விற்பனையின் மொத்த மதிப்பு (ஜிஎம்வி) 380 கோடி டாலராக இருந்தது. இந்த நிலையில், கரோனா பேரிடரால் வலைதளத்தின் மூலமாக பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பானது, வசதியானது, சுகாதாரமானது போன்ற எண்ணங்களின் காரணமாக வலைதள பொருள் விற்பனை நிறுவனங்களை புதிய நுகா்வோா்கள் அதிக அளவில் நாடி வருகின்றனா். இந்த எண்ணிக்கை மாதாந்திர அடிப்படையில் கணிசமான அளவில் உயா்ந்து வருகிறது. அதன் பயனாக, நடப்பாண்டில் இணையம் வாயிலான பொருள்கள் விற்பனையின் மொத்த மதிப்பு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்து 700 கோடி டாலரை எட்டும் என ரெட்சீா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT