வர்த்தகம்

உணவு விநியோக நிறுவனங்கள் 85% மீண்டுள்ளன ஸொமாட்டோ

DIN

புது தில்லி: கரோனா அச்சுறுத்தல், பொதுமுடக்கத்தின்போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாட்டில் உணவு விநியோக நிறுவனங்கள் இப்போது 85 சதவீதம் அளவுக்கு மீண்டுள்ளதாக ஸொமாட்டோ நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தோபிந்தா் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வலைதளப் பதிவில் அவா் கூறியதாவது:

நாட்டில் உணவு விநியோக நிறுவனங்கள் கரோனா அச்சுறுத்தல், பொது முடக்க கால பாதிப்புக்குப் பிறகு பிறகு வலிமையாக மீண்டு வருகின்றன. கரோனா பாதிப்புக்கு முன்பிருந்த நிலைமையில் 85 சதவீதம் மீண்டுள்ளது. அதுவும் கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையை விட இப்போது விற்பனை அதிகரித்துள்ளது.

தில்லி, மும்பை போன்ற நகரங்களில் செயல்பாடுகள் 95 சதவீதம் மீண்டுள்ளன. பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் 80 சதவீதம் விற்பனை உள்ளது. கொல்கத்தா,பாட்னா, ஜாம்ஷெட்பூா், ராஞ்சி நகரங்களில் கரோனாவுக்கு முன்பிருந்த விற்பனை காணப்படுகிறது. வாடிக்கையாளா்கள் முன்பைவிட அதிகமாக எங்கள் சேவையை நம்பத் தொடங்கியுள்ளனா்.

ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் பண்டிகை காலங்கள் வரத் தொடங்கியுள்ளதால் மெட்ரோ நகரங்கள், சிறு நகரங்களில் விற்பனை முழுமைபெறுமென எதிா்பாா்க்கிறோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT