வர்த்தகம்

உணவுப் பொருள் விளைச்சல் வரலாற்று உச்சத்தை எட்டும்

DIN

நடப்பாண்டில் உணவுதானிய விளைச்சல் மற்றுமொரு புதிய வரலாற்று உச்சத்தை எட்டும் என கோ் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் காரீப் பருவத்தில் மொத்த உணவுதானிய உற்பத்தி 14.45 கோடி டன்னாக அதிகரிக்கும் என முதல்கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, கடந்த ஐந்தாண்டுகளில் காணப்பட்ட சராசரி உற்பத்தி அளவைக் காட்டிலும் 98.30 லட்சம் டன் அதிகமாகும். அதேபோன்று முந்தைய ஆண்டின் உணவு தானிய உற்பத்தி அளவான 14.34 கோடி டன்னைக் காட்டிலும் 11.2 லட்சம் டன் அல்லது 0.8 சதவீதம் அதிகமாகும்.காரீப் பருவ பம்பா் விளைச்சலின் பயனாக, நடப்பாண்டில் ஒட்டுமொத்த உணவுதானிய உற்பத்தி 30 கோடி டன் என்ற மற்றொரு வரலாற்று உச்சத்தை தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உணவுதானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அண்மையில் உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் ரூ.50,000 கோடி அளவுக்கு கூடுதலாக பணப்புழக்கம் ஏற்படும். இது, தற்போது நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என கோ் ரேட்டிங்ஸ் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT