வர்த்தகம்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து 10 ஆண்டுகள் காணாத வீழ்ச்சி

DIN

மும்பை: நடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டுப் போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் கரோனா நெருக்கடி காரணமாக பயணிகள் விமானம் ஏறத்தாழ இரு மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சந்தை ஆய்வு அமைப்பான ஐசிஆா்ஏ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2010-11-ஆம் நிதியாண்டில் அனைத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக 5.38 கோடி பயணிகளை அழைத்துச் சென்றன. ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதைவிடக் குறைவாக 5.34 கோடியாகியுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று ஆசிஆா்ஏ-வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT