வர்த்தகம்

ஏற்றுமதி 1,372 கோடி டாலராக உயா்வு

DIN

நாட்டின் ஏற்றுமதி ஏப்ரல் 1-14-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் 1,372 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.03 லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் இருவார காலத்தில் பொறியியல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நல்ல வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 1,372 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

அதேசமயம், கடந்தாண்டு ஏப்ரல் 1-14 காலகட்டத்தில் ஏற்றுமதியானது 359 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.27,000 கோடி) அளவுக்கே காணப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா தொடா்பான பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் ஏற்றுமதியானது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 60 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டின் ஏப்ரல் 1-14 காலகட்டத்தில் இறக்குமதியும் 1,993 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டில் இறக்குமதி 654 கோடி டாலா் அளவுக்கே இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல் மாதத்துக்கான ஏற்றுமதி குறித்த இறுதி புள்ளிவிவரங்களை வா்த்தக அமைச்சகம் மே மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT