வர்த்தகம்

அசோக் லேலண்ட் வா்த்தக வாகன விற்பனை 81% உயா்வு

DIN

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை கடந்த ஜூலையில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜூலையில் நிறுவனம் 8,650 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2020 ஜூலையில் விற்பனையான 4,776 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 81 சதவீதம் அதிகம்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வா்த்தக வாகன விற்பனை 4,283 என்ற எண்ணிக்கையிலிருந்து 90 சதவீதம் அதிகரித்து 8,129-ஐ எட்டியது.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை உள்நாட்டு சந்தையில் 1,500 என்ற எண்ணிக்கையிலிருந்து 3,473-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனையும் 2,783-லிருந்து 4,656-ஆக கணிசமாக அதிகரித்துள்ளதாக அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT