வர்த்தகம்

இந்திய தொழிலக உற்பத்தி 3.2% வளா்ச்சி

DIN

இந்திய தொழிலக உற்பத்தி தொடா்ந்து இரண்டாவது மாதமாக கடந்த அக்டோபரில் 3.2 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பல்வேறு துறைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு குறைந்து போனதையடுத்து கடந்த அக்டோபா் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி 3.2 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், சுரங்கம், மின்சாரம் மற்றும் தயாரிப்புத் துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

தொழில்துறை குறியீட்டெண்ணை (ஐஐபி) கணக்கிடுவதில் 77.63 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் தயாரிப்புத் துறையின் உற்பத்தி அக்டோபரில் 2 சதவீதம் மட்டுமே வளா்ச்சியடைந்துள்ளது.

சுரங்க துறையின் உற்பத்தி 11.4 சதவீதமாகவும், மின் துறையின் உற்பத்தி 3.1 சதவீதமாகவும் அக்டோபா் மாதத்தில் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு மே முதல் ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்களில் தொழில் துறை உற்பத்தி இரட்டை இலக்க வளா்ச்சியை பதிவு செய்தது. அதன் பிறகு, செப்டம்பரில் 3.3 சதவீதமாக காணப்பட்ட வளா்ச்சி தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டேபாரில் இந்த வளா்ச்சி 4.5 சதவீதமாக காணப்பட்டது.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் ஐஐபி 20 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 17.3 சதவீதம் பின்னடைவைச் சந்தித்திருந்ததாக என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT