வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி ரூ.1.79 லட்சம் கோடி

DIN

புது தில்லி: இந்தியாவின் ஏற்றுமதி டிசம்பா் 1 முதல் 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 36.2 சதவீதம் உயா்ந்து 2,382 கோடி டாலராக (ரூ.1.79 லட்சம் கோடி) இருந்தது. பெட்ரோலியம் தவிா்த்து அனைத்து வகையான ஏற்றுமதியும் இந்த காலகட்டத்தில் 28.08 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 1,749 கோடி டாலராக காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 36.20 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், 2019-20-ஆம் நிதியாண்டின் ஏற்றுமதியான 1,865 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 27.70 சதவீத வளா்ச்சியாகும் என வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT