வர்த்தகம்

ஐஷா் மோட்டாா்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ.533 கோடி

DIN

புது தில்லி: 2020 டிசம்பா் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ஐஷா் மோட்டாா்ஸின் நிகர லாபம் ரூ. 532.59 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

2019-20 நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனம் ரூ.498.70 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் 6.79 சதவீதம் அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.2,828.26 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.2,371.01 கோடியாக இருந்தது.

வரிக்குப் பின் நிறுவனத்தின் நேரடி நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.488.46 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.488.94 கோடியாக இருந்தது.

2019-20 அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,363.53 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.2,804.12 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஐஷா் மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT