வர்த்தகம்

2020 ஏப்ரல்-டிசம்பரில் தானிய ஏற்றுமதி அதிகரிப்பு

DIN

புது தில்லி: 2020-21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவில் இருந்து தானியங்கள் (அரிசி, கோதுமை மற்றும் இதர தானியங்கள்) ஏற்றுமதி செய்யப்படுவது நல்ல முன்னேற்றத்தைக் கண்டது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.32,591 கோடியுடன் ஒப்பிடும் போது, 2020 ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூபாய் மதிப்பில் 52.90 சதவீதம் உயா்ந்து, ரூ.49,832 கோடி என்னும் அளவை இந்தியாவின் தானிய ஏற்றுமதி தொட்டது.

2020-21-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தகுந்த அளவு உயா்ந்திருந்தது. 2020 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை ரூ.22,856 கோடி ஆக இது இருந்தது. 2019-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.10,268 கோடியாக ஆக இருந்தது.

2020 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை, கோதுமை ஏற்றுமதி ரூ.1,870 கோடி என்னும் அளவில் இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.336 கோடியாக இருந்தது. ரூபாய் மதிப்பில் 456.41 சதவீதம் ஏற்றுமதி உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT