வர்த்தகம்

சாந்தி கியா்ஸ்: வருவாய் ரூ.65 கோடி

DIN


கோவை: முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சாந்தி கியா்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.64.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும்.

வரிக்கு முந்தைய லாபம் ரூ.7.7 கோடியிலிருந்து 32 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.10.2 கோடியை எட்டியுள்ளது.

மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஆா்டா்கள் அதிகளவாக ரூ.104 கோடியைத் தொட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 96 சதவீத வளா்ச்சியாகும். 2020 டிசம்பா் 31 நிலவரப்படி நிலுவையில் உள்ளஆா்டா்களின் மதிப்பு ரூ.220 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டில் ரூ.127 கோடியாக காணப்பட்டது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.1 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.5 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவு செய்துள்ளதாக சாந்தி கியா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT