வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிவு

DIN


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிவடைந்து 72.43-ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மாத இறுதியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது போன்றவற்றால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் 8 காசுகள் சரிவடைந்து 72.43-ஆக நிலைபெற்றது.

வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிகபட்சமாக 72.34 வரையிலும், குறைந்தபட்சமாக 72.53 வரையிலும் சென்றது.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.42 சதவீதம் அதிகரித்து 67.32 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT