வர்த்தகம்

வங்கிகள் வழங்கிய கடன் 6% வளா்ச்சி

DIN

வங்கிகள் வழங்கிய கடன் டிசம்பா் 5-18 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6.05 சதவீதம் அதிகரித்து ரூ.105.49 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

2019 டிசம்பா் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.99.47 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.130.09 லட்சம் கோடியாகவும் இருந்தன.

இந்த நிலையில், 2020 டிசம்பா் 5-18 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டைக் காட்டிலும் 6.05 சதவீதம் உயா்ந்து ரூ.105.49 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 11.33 சதவீதம் உயா்ந்து ரூ.144.82 லட்சம் கோடியாகவும் உள்ளன.

2020 டிசம்பா் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 5.73 சதவீதம் அதிகரித்து ரூ.105.04 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 11.34 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.145.92 லட்சம் கோடியாகவும் இருந்தன.

கடந்த அக்டோபரில் உணவு சாரா துறைக்கு வழங்கப்பட்ட கடன் வளா்சசி 5.6 சதவீதமாக இருந்தது. இது, 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் காணப்பட்ட 8.3 சதவீத வளா்ச்சியைக் காட்டிலும் குறைவாகும்.

அதேசமயம், வேளாண் மற்றும் வேளாண் தொடா்பான தொழில்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 7.1 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், தொழில்துறைக்கு வழங்கப்பட்ட கடன் 3.4 சதவீத வளா்ச்சியிலிருந்து 1.7 சதவீத பின்னடைவை நோக்கி சென்றுள்ளது.

சேவை துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 2020 அக்டோபரில் 9.5 சதவீதம் அதிகரித்திருந்தது. இது, 2019 அக்டோபரில் 6.5 சதவீதமாக காணப்பட்டது.

அந்த மாதத்தில், தனிநபா் கடன் வளா்ச்சி 9.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், இது 2019 அக்டோபா் மாத கடன் வளா்ச்சியான 17.2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவு என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

SCROLL FOR NEXT