வர்த்தகம்

ஸோமாட்டோ புதிய பங்கு வெளியீட்டு அமோக வரவேற்பு

DIN

ஆன்லைன் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஸோமாட்டோ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.

விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.9,375 கோடியை புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டுவதாக ஸோமாட்டோ முன்னா் அறிவித்திருந்தது. அதன்பிறகு, அந்தத் தொகை ரூ.5,178 கோடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 14-இல் தொடங்கிய ஸோமாட்டோ பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த வெளியீட்டில் பங்கொன்றின் விலை ரூ.72-76-ஆக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளா்களிடமிருந்து 38 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. அதன்படி 71.92 கோடி பங்குகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் 2,751.25 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தன.

2020 மாா்ச் மாதத்துக்குப் பிறகு ஸோமாட்டோவின் புதிய பங்கு வெளியீடே மிகப்பெரியதாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT