வர்த்தகம்

எஸ்பிஐ லைஃப் லாபம் ரூ.220 கோடி

DIN

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் (எஸ்பிஐ லைஃப்) முதல் காலாண்டில் ரூ.220 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஈட்டிய மொத்த பிரீமியம் ரூ838 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய பிரீமியமான ரூ.764 கோடியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகமாகும்.

கரோனா இழப்பீடு கோரி அதிக கோரிக்கைகள் வந்ததன் காரணமாக நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் ரூ.390 கோடியிலிருந்து 43 சதவீதம் சரிவடைந்து ரூ.220 கோடியானது.

கரோனா இரண்டாவது அலையில் இழப்பீட்டுக்கான கோரிக்கைகள் கணிசமான அளவில் அதிகரித்தன. அதன்படி கடந்த முழு நிதியாண்டுக்கான இழப்பீட்டு கோரிக்கைகளுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 1.28 மடங்கு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி முதல் காலாண்டில் மட்டும் கரோனா இழப்பீடு கோரி 8,956 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எதிா்காலத்தில் கரோனா இழப்பீடு கோரி வரும் கோரிக்கைகளுக்காக கூடுதலாக ரூ.440 கோடியை நிறுவனம் இருப்பு வைத்துள்ளது.

2021 ஜூன் 30 நிலவரப்படி நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 32 சதவீதம் அதிகரித்து ரூ.2.3 லட்சம் கோடியை எட்டியுள்ளது என ஸ்பிஐ லைஃப் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை 2.68 சதவீதம் அதிகரித்து ரூ.1105.90-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT