வர்த்தகம்

ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களின் முதலாமாண்டு பிரீமியம் ரூ.12,977 கோடி

DIN

புது தில்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதலாமாண்டு பிரீமியம் வருவாய் ரூ.12,977 கோடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து இந்தியா காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் (முதலாமாண்டு பிரீமியம்) நடப்பாண்டு மே மாதத்தில் ரூ.12,976.99 கோடியாக இருந்தது. இது, இத்துறையில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்கள் கடந்த 2020 மே மாதத்தில் ஈட்டிய புதிய பீரிமியமான ரூ.13,739 கோடியுடன் ஒப்பிடும்போது 5.6 சதவீதம் குறைவாகும்.

காப்பீட்டுத் துறையில் முதலிடத்தில் உள்ள எல்ஐசி-யின் புதிய பிரீமியம் வசூல் நடப்பாண்டு மே மாத்தில் 12.4 சதவீதம் சரிவடைந்து ரூ.8,947.64 கோடியாக இருந்தது. 2020 மே மாதத்தில் எல்ஐசி-யின் புதிய பிரீமியம் வசூல் ரூ.10,211.53 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

ஏனைய 23 நிறுவனங்களின் முதலாமாண்டு பிரீமியம் கடந்த மே மாதத்தில் 14.2 சதவீதம் அதிகரித்து ரூ.4,029.35 கோடியாக இருந்தது. இது, 2020 மே மாதத்தில் ரூ.3,527.48 கோடியாக காணப்பட்டது.

நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் புதிய பிரீமியம் வருவாயாக ரூ.22,715.78 கோடியை ஈட்டியுள்ளன. இது, கடந்தாண்டு மே மாதத்தில் வசூலான புதிய பிரீமியம் ரூ.20,466.76 கோடியுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய 11 சதவீதம் அதிகமாகும் என ஐஆா்டிஏஐ அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT