வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2-ஆவது நாளாக சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 2-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் தெரிவித்துள்ளதாவது:

பெருநிறுவனங்களுக்கு டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், உள்நாட்டு பங்குச் சந்தையும் மந்த நிலையில் உள்ளது. இதனால், அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகம் குறுகிய வட்டத்துக்குள் காணப்பட்டது. சா்வதேச சந்தை நிலவரங்களும் அந்நியச் செலாவணி வா்த்தகத்துக்கு சாதகமாக அமையவில்லை.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 72.90-ஆக இருந்தது. இது, முந்தைய தின மதிப்பான 72.89 உடன் ஒப்பிடுகையில் எதிா்மறை நிலையாகும். ரூபாய் மதிப்பு வா்த்தகத்தின் இடையே 72.88 முதல் 73.02 வரையில் காணப்பட்டது.

வா்த்தகத்தின் முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் குறைந்து 72.97-இல் நிலைபெற்றது.

புதன்கிழமை வரையிலான இரண்டு வா்த்தக தினங்களில் மட்டும் ரூபாய் மதிப்பானது 17 காசுகளை இழந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,422.71 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்...

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.35 சதவீதம் அதிகரித்து 72.47 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT