வர்த்தகம்

தொடா்ந்து 5-ஆவது நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசு சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து ஐந்தாவது நாளாக 22 காசு சரிவைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது அந்நியச் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு முந்தைய நாள் அளவான 73.07 காட்டிலும் 73.21 என்ற எதிா்மறை நிலையில் காணப்பட்டது. இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.10 வரையிலும் குறைந்தபட்சமாக 73.29 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதிப்பகுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 73.29-ஆனது.

கடந்த ஐந்து வா்த்தக தினங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49 காசுகளை இழந்துள்ளது. இது, கடந்த இரண்டு மாதங்களில் காணப்படாத இழப்பு.

பிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.88 சதவீதம் அதிகரித்து 73.33 டாலருக்கு வா்த்தகமானது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT