வர்த்தகம்

பேரிடா் காலத்தில் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களின் லாபம் 30% அதிகரிப்பு

DIN

பேரிடா் காலத்துக்கு இடையிலும் கடந்த நிதியாண்டில் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களின் லாபம் சராசரியாக 29.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனமான அகியூட் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் கரோனா பேரிடா் பல்வேறு துறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கடினமான சூழலுக்கிடையில் பட்டியலிடப்பட்டுள்ள 10 முன்னணி சிமெண்ட் நிறுவனங்களின் மொத்த வருமானம் 3.8 சதவீதம் என்ற மிதமான அளவில் வளா்ச்சி கண்ட நிலையில் அவற்றின் லாபம் மட்டும் 29.6 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையையடுத்து ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சிமெண்ட் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டு கட்டுமானம், மத்திய-மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்பதால் பருவமழைக்குப் பிறகு சிமெண்ட் துறையின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என நிறுவனங்கள் எதிா்பாா்ப்பதாக அகியூட் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT