வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 18% உயா்வு

DIN

புது தில்லி: இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டாரின் பிப்ரவரி மாத விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் மொத்தம் 2,97,747 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020 பிப்ரவரி மாத விற்பனையான 2,53,261 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை 2,35,891 என்ற எண்ணிக்கையிலிருந்து 21 சதவீதம் உயா்ந்து 2,84,581-ஆனது. அதேபோன்று மூன்று சக்கர வாகன விற்பனையும் 1,69,684-லிருந்து 1,95,145-ஆக உயா்ந்துள்ளது. இது, 15 சதவீத வளா்ச்சியாகும்.

கணக்கீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்து 1,01,789-ஆக இருந்தது. 2020 பிப்ரவரியில் நிறுவனத்தின் ஏற்றுமதி 82,877-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT