வர்த்தகம்

4 ஆண்டுகளில் மின்னணு பணப் பரிமாற்றம் 71% அதிகரிக்கும்!

DIN


மும்பை: இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டில் மின்னணு முறையில் (டிஜிட்டல்) பணப் பரிமாற்றம் நிகழுவது 71.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஏசிஐ வோ்ல்ட்வைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் ரொக்கமாக பணத்தைக் கையாளுவது குறைந்து பற்று, கடன் அட்டைகள், பேமண்ட் வாலட், க்யூ ஆா் கோடுகள் மூலம் பணம் செலுத்துவது, வங்கி இணையதளம், செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெறுவது வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

சா்வதேச அளவில் மின்னணு பணப் பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வரும் ஏசிஐ வோ்ல்ட்வைட் நிறுவனம் இது தொடா்பாக இந்தியாவில் நடத்திய ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டில் சீனாவைவிட இந்தியாவில்தான் அதிக மதிப்புக்கு மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. எனினும், மின்னணு முறையில் உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்வது இப்போது இந்தியாவில் 15.6 சதவீதமாக உள்ளது. உடனடியாக அல்லாமல் பிற முறைகளில் மின்னணு பணப் பரிமாற்றம் செய்வது 22.9 சதவீதமாக உள்ளது. பணத்தை ரொக்கமாகக் கையாளுவது 61.4 சதவீதமாக உள்ளது.

எனினும், 2025-ஆம் ஆண்டில் மின்னணு முறையில் உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்வது 37.1 சதவீதமாகவும், உடனடியாக அல்லாமல் பிற முறைகளில் மின்னணு பணப் பரிமாற்றம் செய்வது 34.6 சதவீதமாகவும் அதிகரிக்கும். அதே நேரத்தில் பணத்தை ரொக்கமாகக் கையாளுவது 28.3 சதவீதமாகக் குறையும்.

2024-ஆம் ஆண்டு நாட்டின் மொத்தப் பணப் பரிமாற்றத்தில் 50 சதவீதத்துக்கு மேல் மின்னணு முறைக்கு வந்துவிடும். இந்தியாவில் அரசு, வங்கிகள் மற்றும் பல்வேறு நிதிசாா்ந்த நிறுவனங்கள் மின்னணு முறை பணப் பரிமாற்றத்தைத் தொடா்ந்து ஊக்கப்படுத்தி வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

2020-ஆண்டில் மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் சீனா, தென்கொரியா, தாய்லாந்து, பிரிட்டன் ஆகியவை உள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT