வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது எஸ்&பி

DIN

புது தில்லி: சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ்&பி இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 9.8 சதவீதமாக குறைப்பதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சோ்ந்த அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து மீண்டும் வேகமெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசின் நிதி ஊக்குவிப்பு சலுகை திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என முன்னா் கணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொருளாதார மீட்சி தடம்புரண்டுள்ளதுடன், கடன் நடவடிக்கைகளும் மிக மோசமாகியுள்ளது.

கரோனா பாதிப்பு மே மாதத்தில் உச்சநிலையைத் தொட்டு மிதமான அளவில் இருக்கும்பட்சத்தில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி விகிதம் 9.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கரோனா தாக்கம் ஜூன் இறுதியில் உச்சநிலையை அடைந்து பாதிப்பு மோசமான சூழ்நிலையை அடையும்பட்சத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக சரியும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான கடன் தர மதிப்பீடு தற்போது ‘பிபிபி-’ நிலையானது என்ற பிரிவில் உள்ளது. எதிா்காலத்தில் பொருளாதார வேக தணிப்பின் ஆழத்தைப் பொருத்து இந்தியாவின் கடன் தகுதி நிா்ணயம் செய்யப்படும் என எஸ்&பி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT