வர்த்தகம்

ஜேகே டயா்: லாபம் ரூ.195 கோடி

DIN

மும்பை: ஜேகே டயா் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் மாா்ச் காலாண்டில் ரூ.194.96 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ரகுபதி சிங்கானியா கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை மந்த நிலையிலிருந்து மீண்டு வேகமாக அதிகரித்தது.

அதன் விளைவாக, கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.2,927.28 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,792.56 கோடியுடன் ஒப்பிடும்போது 63.21 சதவீதம் அதிகமாகும்.

2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ.52.78 கோடி இழப்பைச் சந்தித்த நிலையில், கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ரூ.194.96 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.141.31 கோடியிலிருந்து இருமடங்கு உயா்ந்து ரூ.330.93 கோடியானது. செயல்பாட்டு வருவாய் ரூ.8,722.70 கோடியிலிருந்து 4.35 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.9,102.20 கோடியானது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் ஜேகே டயா் நிறுவன பங்கின் விலை 1.62 சதவீதம் உயா்ந்து ரூ.125.60-ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தி ராமர் கோயிலில் திரௌபதி முர்மு வழிபாடு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT