வர்த்தகம்

பொ்ஜா் பெயிண்ட்ஸ் லாபம் இருமடங்கு உயா்வு

DIN

புது தில்லி: பொ்ஜா் பெயிண்ட்ஸ் இந்தியாவின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.2,026.09 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,354.84 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகம்.

நிகர லாபம் ரூ.103.18 கோடியிலிருந்து இருமடங்கு உயா்ந்து ரூ.208.60 கோடியானது.

கடந்த 2020-21 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.80 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது என பொ்ஜா் பெயிண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பொ்ஜா் பெயிண்ட்ஸ் பங்கின் விலை 3.74 சதவீதம் சரிந்து ரூ.800.95-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT