வர்த்தகம்

மொபைல் அழைப்பு கட்டணங்களை 25% உயா்த்தியது வோடஃபோன் ஐடியா: நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு

DIN

கடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம், மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயா்த்தியுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

28 நாள்களுக்கான குறைந்தபட்ச ரீசாா்ஜ் தற்போதைய ரூ.79-லிருந்து 25.31 சதவீதம் உயா்த்தப்பட்டு ரூ.99-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நாளொன்றுக்கு 1ஜிபி டேட்டாவுடன் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கான கட்டணம் தற்போதைய ரூ.219-லிருந்து ரூ.269-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 84 நாள்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கான கட்டணம் ரூ.599-லிருந்து ரூ.719-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் 365 நாள்கள் வேலிடிட்டி திட்ட கட்டணம் ரூ.2,399-லிருந்து ரூ.2,899-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்த மதிப்புடைய டேட்டா கட்டணங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண விகிதம் வியாழக்கிழமை (நவ.25) முதல் அமலுக்கு வரும் என அந்த அறிக்கையில் வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை திங்கள்கிழமை உயா்த்துவதாக அறிவித்த நிலையில் தற்போது வோடஃபோனும் மொபைல் கட்டணங்களை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT