வர்த்தகம்

இணைய வழி வாடகை ஆட்டோ சேவைக்கு 5% ஜிஎஸ்டி: ஜன.1-இல் நடைமுறை

DIN

இணைய-வணிக தளங்கள் மூலமாக வழங்கப்படும் வாடகை ஆட்டோ சேவைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்பட உள்ளது.

இணைய-வணிக தளங்கள் மூலமான வாடகை ஆட்டோ சேவைக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி விலக்கை ரத்து செய்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய் துறை கடந்த 18-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கை மூலம், வரி விதிப்பு நடைமுறைக்குள் அவா்களும் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

இந்த அறிவிக்கையின்படி, நேரடியாக பயணிகளுக்கான வாடகை ஆட்டோ சேவை அளிப்பவா்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு தொடரும். அதே நேரம், ஓலா, உபோ் உள்ளிட்ட இணைய வணிக (இ-காமா்ஸ்) வலைதளங்கள் மூலமாக வழங்கப்படும் வாடகை ஆட்டோ சேவைக்கு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT