வர்த்தகம்

டாடா ஸ்டீல்: உருக்கு உற்பத்தி 78 லட்சம் டன்

DIN

மும்பை: டாடா ஸ்டீல் நிறுவனம் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 77.8 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 7சதவீதம் அதிகரித்து 77.8 லட்சம் டன்னாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் இந்த உற்பத்தி 72.5 லட்சம் டன்னாக காணப்பட்டது.

இந்தியாவில், செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் 47.3 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்தது. இது, முந்தைய காலாண்டில் 45.9 லட்சம் டன்னாக காணப்பட்டது. விற்பனை 50.5 லட்சம் டன்னிலிருந்து 46.4 லட்சம் டன்னாக குறைந்தது.

ஐரோப்பாவில் உருக்கு உற்பத்தி 21.5 லட்சம் டன்னிலிருந்து 25.6 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. இருப்பினும் விற்பனஐ 22.7 லட்சம் டன்னிலிருந்து 21.6 லட்சம் டன்னாக குறைந்ததாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT