வர்த்தகம்

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

DIN

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் வரும் அக்-13 அன்று சீனாவில் அறிமுகமாக இருக்கிறது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பாக ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது. 

'ஒன் பிளஸ் 9ஆர்டி’சீனாவில் வருகிற அக்-13 ஆம் தேதி அறிமுகமாகிறது.இந்தியாவிலும் இந்த சந்தைப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் அறிமுகத் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888

* உள்ளக நினைவகம் 8ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.24,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT