ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான 'ஜியோபோன் நெக்ஸ்ட்' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
’ஜியோ’ ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது.
இதையும் படிக்க | ’ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
’ஜியோபோன் நெக்ஸ்ட்' சிறப்பம்சங்கள் :
* 5.5 இன்ச் அளவுகொண்ட தொடுதிரை
* ஸ்னாப்டிராகன் 215 ஜி
*உள்ளக நினைவகம் 2 ஜிபி , கூடுதல் நினைவகம் 16 ஜிபி
*பின்பக்கம் 13 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , முன்பக்கம் 2 எம்பி அளவு செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
*2500 எம்ஏஎச் பாட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஸ்
மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.3500-க்குள் இருக்கலாம் என விற்பனையாளர்கள் கணிக்கிறார்கள்.