வர்த்தகம்

பஜாஜ் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.1,481 கோடி

DIN

வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.1,481 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பஜாஜ் ஃபைனான்ஸ் 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக மொத்தம் ரூ.7,732 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.6,520 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.965 கோடியிலிருந்து 53 சதவீதம் அதிகரித்து ரூ.1,481 கோடியானது.

செப்டம்பா் காலாண்டில் வழங்கப்பட்ட புதிய கடன் ரூ.36.20 லட்சத்திலிருந்து 75 சதவீதம் அதிகரித்து ரூ.63.30 லட்சமானது.

செப்டம்பா் 30 நிலவரப்படி நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடியிலிருந்து 22 சதவீதம் அதிகரித்து ரூ.1.67 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

மொத்த வாராக் கடன் 1.10 சதவீதத்திலிருந்து 2.45 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.46 சதவீதத்திலிருந்து 2.96 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது என பஜாஜ் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT