ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11' ’ரெட்மி நோட் 11 புரோ ' ஸ்மார்ட்போன்களை சீனாவில் இன்று அறிமுகப்படுத்துகிறது.
’ரெட்மி நோட்’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அதிக சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | 'எம்ஐ' பிராண்ட் பெயரை நீக்கும் ஸியோமி நிறுவனம்
’ரெட்மி நோட் 11’ சிறப்பம்சங்கள் :
* 6.5 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* மீடியாடெக் டைமன்சிட்டி 850
*உள்ளக நினைவகம் 4 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி
*பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* டைப் - சி போர்ட்
’ரெட்மி நோட் 11 புரோ’ சிறப்பம்சங்கள்:
* 6.5 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* மீடியாடெக் டைம்சிட்டி 920
*உள்ளக நினைவகம் 6 ஜிபி , கூடுதல் நினைவகம் 128 ஜிபி
*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* டைப் - சி போர்ட்