வர்த்தகம்

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

DIN

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்-1) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய 'ஏ' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின்  மூத்த ஆலோசகர்  ஆதித்யா பாபர்,'இதுவரை வெளிவந்த சாம்சங் 'ஏ' வரிசை ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தனி இடம் உண்டு. 12 பாண்ட்ஸ் அளவில் அதன் 5ஜி இணைய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஓஎஸ் புதுப்பித்தல் வசதியும் இருக்கிறது. வாடிக்கையாளர்களை நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன் ஏமாற்றது' எனத் தெரிவித்திருக்கிறார்.

கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் :

*6.5 இன்ச் அளவுள்ள எச்டி தொடுதிரை 

*718ஜி ஸ்னாப்டிராகன் பிராசஸர் 

*642எல் ஜிபியூ செயலி 

* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

*ஆண்ட்ராய்டு 11 

கருப்பு , வெள்ளை , ஊதா நிறங்களில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போன்களுக்கு  உள்ளக மற்றும் கூடுதல் நினைவகங்கள் கொண்ட  6 ஜிபி+ 64 ஜிபிக்கு ரூ.35,999 என்றும் 8 ஜிபி +128 ஜிபிக்கு  ரூ.37,499 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்களை சாம்சங் விற்பனை கடைகளிலும் , அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைய தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT