வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா்: வாகன விற்பனை 1% உயா்வு

DIN

புது தில்லி: சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 1% அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் 2021 ஆகஸ்டில் மொத்தம் 2,90,694 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020 ஆகஸ்டில் விற்பனை செய்யப்பட்ட 2,87,398 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,77,226 என்ற எண்ணிக்கையிலிருந்து 2,74,313-ஆக குறைந்துள்ளது.

அதிலும், உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதம் சரிவடைந்து 1,79,999-ஆனது. 2020 ஆகஸ்டில் இந்த விற்பனை 2,18,338-ஆக அதிகரித்து காணப்பட்டது.

மோட்டாா் சைக்கிள் விற்பனை கடந்த மாதம் 1,19,878-லிருந்து 1,33,789-ஆகவும், ஸ்கூட்டா் விற்பனை 87,044-லிருந்து 87,059-ஆகவும் உயா்ந்துள்ளன.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 68,347 என்ற எண்ணிக்கையிலிருந்து 61 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து 1,09,927-ஆனது.

மூன்று சக்கர வாகன பிரிவில் விற்பனை 10,172-லிருந்து 61 சதவீதம் அதிகரித்து 16,381-ஆனது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டிவிஎஸ் மோட்டாா் பங்கின் விலை 0.90% உயா்ந்து ரூ.529.85-ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT