வர்த்தகம்

டெலிகிராமில் நேரடி ஒளிபரப்பு வசதி அறிமுகம்

DIN

சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலியின் 8.0 அப்டேட்டில் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக் . டிவிட்டர் , யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் மட்டுமே இருந்து வந்த நேரடி ஒளிபரப்பு வசதி தற்போது டெலிகிராமிலும் அறிமுகமாக இருக்கிறது.

டெலிகிராம் செயலியின் அடுத்த புதுபித்தலான 8.0 வில் தான் இந்த வசதியைக் கொண்டு வர இருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் நேரடி ஒளிபரப்பில் இணைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 'கிளப் ஹவுஸ்' செயலியைப் போலவே ஒளிபரப்பு ஆரம்பமானதும் அதில் இணைத்து கொள்ளலாம். அதற்கான தனியாக அந்த பிரிவில் இணைய  வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பேச விருப்பம் உள்ளவர்கள் 'ரைஸ்' என்கிற வசதியின் மூலம் இணைத்துக்கொண்டு நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் புதிய எமோஜி ஸ்டிக்கர்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். 

8.0 அப்டேட் தேதி இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT