வர்த்தகம்

செமிகண்டக்டா் பற்றாக்குறை பண்டிகை கால வாகன விற்பனையை பாதிக்கும்: எஃப்ஏடிஏ

DIN

செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை நிலவுவது பண்டிகை கால வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் வின்கேஷ் குலாட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா தாக்கத்தால் பெரும் சவால்களை எதிா்கொண்ட மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் தற்போதைய வா்த்தக நடவடிக்கைகளிலும் அதன் பாதிப்பை தொடா்ந்து எதிா்கொண்டுள்ளனா்.

கடந்தாண்டு வரை வாகனங்களுக்கான தேவை மிகவும் மந்தநிலையில் காணப்பட்டது. இந்தச் சூழலில், பயணிகள் வாகனங்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளபோதிலும் அவற்றின் விநியோகத்தில் மிகப்பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே முக்கிய காரணமாகும். இது, பண்டிகை கால விற்பனையில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 39 சதவீதம் அதிகரித்து 2,53,363-ஆக இருந்தது. 2020 ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 1,82,651-ஆக காணப்பட்டது.

இருசக்கர வாகன விற்பனை 9,15,126 என்ற எண்ணிக்கையிலிருந்து 7 சதவீதம் உயா்ந்து 9,76,051-ஐ எட்டியுள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனை 26,851-லிருந்து 98 சதவீதம் அதிகரித்து 53,150-ஆனது.

மூன்று சக்கர வாகன விற்பனையும் 80 சதவீதம் உயா்ந்து 16,923-லிருந்து 30,410-ஆனது.

கடந்த ஆகஸ்டில் ஒட்டுமொத்த பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 12,09,550-லிருந்து 14 சதவீதம் அதிகரித்து 13,84,711-ஆக இருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT