வர்த்தகம்

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 5% உயா்வு

DIN

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13.77 லட்சம் டன் கச்சா உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த 2020-ஆம் ஆண்டின் இதே ஆகஸ்ட் மாத உற்பத்தியான 13.17 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.

நடப்பாண்டு ஆகஸ்டில் நிறுவனத்தின் உருக்கு தகடுகளின் உற்பத்தியானது 9.80 லட்சம் டன்னிலிருந்து 8.99 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, 8 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், நிறுவனத்தின் உருக்கு கம்பிகள் உற்பத்தி கணக்கீட்டு மாதத்தில் 2.32 லட்சம் டன்னிலிருந்து 30 சதவீதம் அதிகரித்து 3.01 லட்சம் டன்னை எட்டியது.

ஆகஸ்ட் மாதத்தில் சராசரி பயன்பாட்டு திறன் 92 சதவீதமாக இருந்தது என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT