வர்த்தகம்

ஆபரண ஏற்றுமதியில் புதிய சாதனை

DIN

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சமாக ரூ.24,240 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பண்டிகை கால வரவு மற்றும் கட்டுப்பாடுகளில் தளா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆபரணங்களின் ஏற்றுமதி புதிய உச்சமாக ரூ.24,239.81 கோடியை எட்டியது. இது, 2020 ஆகஸ்டில் ரூ.13,160.24 கோடியாகவும், 2019 ஆகஸ்டில் ரூ.20,793.80 கோடியாகவும் காணப்பட்டது.

நறுக்கப்பட்ட மற்றும் பட்டைதீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 29.37 சதவீதம் அதிகரித்த போதிலும், தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்டில் 15.06 சதவீதம் குறைந்து ரூ.5,756.54 கோடியானது.

அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆபரணங்களுக்கான தேவை சிறப்பாக அதிகரித்துள்ளது என ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT