விரைவில் வெளியாகும் ’ஓப்போ கலர் ஓஸ் 12’ இயங்குதளம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனக்கென தனி இடம் வகிக்கும் ஓப்போ நிறுவனம் இந்த மாத (செப்) இறுதிக்குள் தன்னுடைய புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட இருக்கிறது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனக்கென தனி இடம் வகிக்கும் ஓப்போ நிறுவனம் இந்த மாத (செப்) இறுதிக்குள் தன்னுடைய புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட இருக்கிறது.
ஓப்போ கலர் ஓஸ் 12 எனப்படும் இந்த இயங்குதளம் ஆண்டுராய்ட் 12 -லிருந்து சில புதுப்பித்தல் வசதியுடன் சீனாவில் இம்மாதம் வெளியிடப்படுகிறது.
சில புதிய வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த ஓஎஸ் இயங்குதளத்தில் ‘கிராஸ் கிரீன் இன்ட்ராக்ஷன்’ வசதியும் இடம் பெறுகிறது.
Advertisement
இதையும் படிக்க | 10 கோடி பயனாளர்களைக் கடந்த ‘கூகுள் ஃபிட்’ செயலி
மேலும் புதிய செயலிகளை துரிதமாக செயல்படுத்தவும் , தகவலை வேகமாகப் பரிமாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதோடு ஸ்பிலிட் ஸ்கிரீன் வசதியும் இடம் பெற்றிருக்கிறது.
முக்கியமாக நொடிஃபிகெஷன் செட்டிங் , தனிநபர் அந்தரங்கங்கள் போன்றவை பாதுகாக்கப்படும் என ஓப்பொ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.
இந்த இயங்குதளமானது மியூ , ஃப்ளைம் , ஸ்மார்ட்சன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய ஓஎஸ் வருகையால் ஓப்போ பயனாளிகள் அதை பயன்படுத்தும் ஆவலில் இருக்கிறார்கள்.