வர்த்தகம்

கரூா் வைஸ்யா வங்கி: மொத்த வா்த்தகம் ரூ.1.25 லட்சம் கோடி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரமேஷ் பாபு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

வங்கி கடந்த நிதியாண்டில் திரட்டிய மொத்த வைப்புத்தொகை ரூ.68,676 கோடியாகவும், வழங்கிய கடன்கள் ரூ.58,086 கோடியாகவும் இருந்தன. இதையடுத்து, 2022 மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வா்த்தகமானது ரூ.1.26,762 கோடியைத் தொட்டது. வங்கியின் நூற்றாண்டு கால சேவையில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

வாடிக்கையாளா்களுக்கு தரமான வங்கி சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வங்கி தொடா்ந்து செயலாற்றி வருகிறது.

கடந்த நிதியாண்டு நிலவரப்படி, வங்கிக்கு 789 கிளைகளும், 1,639 ஏடிஎம்களும் உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT